Friday, June 28, 2013
Wednesday, June 26, 2013
திட்டமிடப்பட்ட செல் சாவு - APOPTOSIS - அபப்டோசிஸ்
மக்களே...!!!
நான் இந்திய அறிவியல் கழகத்துல வேலை செய்திட்டு இருந்தப்போ, எனக்கு என்னோட வேலைக்காக நெறைய படங்களை வரைய வேண்டி இருந்தது. அப்படி வரைஞ்ச படங்களை அப்போ பத்திரப்படுத்தி வெச்சிருந்தேன். அதையெல்லாம் இப்போ பதிவேத்தினா என்னன்னு தோணினதால, இந்த வலைப்பூவை ஆரம்பிச்சேன். இது முழுக்க முழுக்க படங்களுக்கான வலைப்பூ. அதனால, அப்பப்போ போடற படங்களுக்கான முன்னுரை அல்லது அறிமுகம் மட்டும் சில வரிகள் எழுதி, படங்களை போடப்போறேன். வழக்கம் போல, பார்த்துட்டு புடிச்சிருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.
திட்டமிடப்பட்ட செல் சாவு -APOPTOSIS - அபப்டோசிஸ்
அபப்டோசிஸ் அப்படின்னா என்னன்னா, ஒரு செல் உருவானதோட நோக்கம் முடிஞ்சதும், அந்த செல் தன்னை தானே அழிச்சிக்கும். அதுக்கு பேரு தான் அபப்டோசிஸ். இங்க நான் வரைஞ்சிருக்கிறது நரம்பு செல்களில் நடக்கும் அபப்டோசிஸ் பத்தின சின்ன தகவல்.
நரம்பு செல்களில் நடக்கிற அபப்டோசிஸ்க்கு ஒரு முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு. அது என்ன...? நம்ம உடலிலில் இருக்க கூடியஒவ்வொரு செல்லும் நரம்பு செல்களால் இணைக்கப்பட்டு ஒரு முழுமையான நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டு இருக்கும். எப்போ ஒரு புது செல் உருவானாலும், உடனடியா அதுக்கு தேவையான நரம்பு செல்கள் உருவாக்கப்பட்டு நெட்வொர்க்குள்ள கொண்டு வரப்படும்.
சில சமயம் தேவையான அளவு நரம்பு செல்களை விட அதிகமா உருவாகிடும். மீதியுள்ளது சாகவேண்டியது தான். ஆனா, அந்த மீதியுள்ளவை அப்படின்னு எப்படி தேர்வு செய்றது ...? அதுக்கு ஒரு வழிமுறை இருக்கு. எந்த செல்லுக்கு நரம்பு செல்கள் போய் சேரனுமோ, அந்த செல்கள் ஒரு உயிர் வேதிப்பொருளை - SURVIVAL FACTORS - ஐ வெளியிடும். அந்த உயிர்ப்பொருளை சரியா உள் வாங்கிக்கிற செல்கள் மட்டும் உயிரோட இருக்கும். மத்தவை செத்துப்போகும்.
இது எதுக்காகன்னா, உருவாகும் செல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நரம்பு செல்களோட எண்ணிக்கையையும் சமமா பராமரிக்க. அடுத்த படத்துல சிந்திப்போம்.
Friday, June 21, 2013
விலங்கு செல் - அமைப்பு...!!!
மக்களே...!!!
நம்ம குழுவில் இருந்து இன்னொரு வலைப்பூ. இங்க நான் நம்ம உயிர்நுட்பம் வலைப்பூவுக்காக தயார் செய்யும் படங்களை மட்டும் இங்க பதிவேற்றம் செய்ய முடிவு செய்திருக்கேன்.
நம்ம முதல் பதிவு - விலங்கு செல் அமைப்பு.
Subscribe to:
Posts (Atom)